Categories
மாநில செய்திகள்

இனி விடுமுறை நாட்களில் பள்ளிகள்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் தனியார் பள்ளிகள் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது. விடுமுறை நாட்களில் வகுப்புகளில் நடத்தி மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது.

மேலும் அரசு பள்ளிகளில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மனநலம் மற்றும் உடல் நலம் குறித்து ஆலோசனை வழங்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |