சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க சில கட்டுப்பாடுகள் விதித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆணை பிறப்பித்துள்ளார் .
இது பற்றி மைக் பாம்பியோ டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுருந்தார் : “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன், மேலும் சீனாவின் தன்னாட்சி பகுதியாக இருக்கும் திபெத், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் செல்ல சீனா அனுமதியை மறுத்துள்ளது.
ஆனால், சீனாவில் இருந்து அதிகாரிகள், மக்கள் சுதந்திரமாக அமெரிக்காவிற்கு வந்து, பல வசதிகளை அனுபவித்துவருகிறார்கள். அதனால் திபெத் பகுதி்க்குள் வெளிநாட்டினர், பத்திரிகையாளர்கள் மற்றும் அமெரிக்க மக்கள் நுழைய தடை விதிக்கும் சீன அரசு அதிகாரிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு திபெத் அணுகல் சட்டப்படி விசா வழங்குவதில் கட்டுப்பாடு கொண்டுவருகிறோம். இதன் மூலம் திபெத்திய மக்களுக்கு நியாயமான முறையில் சுயாட்சி அமைக்க ஆதரவு தருவோம்” என்று அறிவித்திருந்தார்.