இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு வசதியாக தற்போது நிறைய வசதிகள் உள்ளன. அதில் வாட்ஸ்அப் மூலமாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம். ஏனென்றால் தற்போது அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் கட்டாயம் வாட்ஸ்அப் இருக்கும். இந்தியன் ஆயில் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என்று 3 நிறுவனங்களுக்கும் தனித்தனியாக புக்கிங் நபர்கள் இருக்கின்றனர். தற்போது பாரத் கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எளிதில் வாட்ஸ்அப் மூலமாக புக்கிங் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முதலில் 1800224344 என்ற நம்பருக்கு வாட்ஸ் ஆப் செய்ய வேண்டும்.
இந்த நம்பர் மட்டுமில்லாமல் https://api.whatsapp.com/send?phone=911800224344&text=hi என்ற லிங்க்கை கிளிக் செய்து நேரடியாக உள்ளே செல்லலாம்.
வாட்ஸ் ஆப்பில் hi என்று அனுப்பியவுடன் பாரத் கேஸ் தொடர்பான சேவைகள் தோன்றும். அதில் ‘book cylinder’ என்ற ஆப்சனை தேர்தெடுத்து, ‘1’ என டைப் செய்து அனுப்ப வேண்டியிருக்கும்.
புக்கிங் செய்தவுடன் இதுபோல ஒரு தகவல் வரும்.
”We have received your refill order. Your Booking No. 165673 is confirmed for Consumer Number 10000000023073921 at New MODERN GAS. The cylinder will be delivered to you soon”
இப்போது உங்களுக்கு சிலிண்டர் புக்கிங் ஆகிவிடும்.
பிறகு மீண்டும் மெயின் மனுவுக்கு வந்து ’hi’ அனுப்பினால் பணம் செலுத்தும் வசதி இருக்கும். அதற்கு ‘2’ என டைப் செய்து அனுப்ப வேண்டியிருக்கும்.
இதுபோல, சிலிண்டர் தொடர்பான நிறைய சேவைகளை இந்த வாட்ஸ் ஆப் நம்பர் மூலமாகப் பயனர்கள் பெறமுடியும்.