Categories
மாநில செய்திகள்

இனி வன்னியர்கள் வாழ்வில்…” வசந்தம் வீசும்”… டாக்டர் ராமதாஸ் அறிக்கை…!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீடு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:-
கடந்த 40 ஆண்டு காலமாக வன்னியர்களுக்கு என்று தனி இடப்பங்கீடு தொடர்பான கோரிக்கைக்காக போராடியுள்ளோம்.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததுடன் மட்டுமல்லாமல், சில மாதங்களுக்கு முன்பாக இது பற்றிய தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளோம். இதன் மூலமாக தமிழக அரசானது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கும் இதில் பாதி 10.50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கப்படுவதாக தமிழக அரசு தீர்மானித்தது.

கடந்த 26 ஆம் தேதியன்று பிற்பகல் சட்டசபை கூட்டத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பங்கினை சட்டசபையில் வரையறை செய்து தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு அடுத்ததாக, இந்த சட்டமானது நடைபெற வேண்டுமெனில் ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும். ஏற்கனவே சட்டசபையில் சட்டமானது நிறைவேற்றப்பட்டு விட்டதால், மற்ற பணிகள் எல்லாம் தானாகவே நடைபெறும். இதை யாராலும் எவ்வகையிலும் தடுக்க இயலாது.

வன்னியர்களுக்கு கென்று 10.50 சதவீத இட ஒதுக்கீதானது தமிழக அரசின் சார்பாக அரசிதழ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வெளியிட உள்ள ஆள் தேர்விற்கான அறிக்கையில் வன்னியர்களுக்கு என 10.50 சதவீதத்தை கட்டாயம் அளிக்க வேண்டும். இதனை எவராலும் தடுக்க இயலாது. இனி வன்னியர்கள் வாழ்வில் ஏற்றம்  மட்டுமே காணப்படும். இந்த இட ஒதுக்கீட்டால் நடப்பு ஆண்டில் நிறுவப்பட உள்ள அரசு பணி இடங்கள் அனைத்திலும் நம் பாட்டாளிகள் தான் அதிகம் காணப்படுவர்.

இந்தப் 10.50 சதவீதம் மூலமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே வீசும். தங்களின் திணை பரப்பு கொள்கைக்காக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் அனைவரும் அமைதியான முறையில் செயல்பட வேண்டும். இதற்காக எந்த ஒரு ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இருக்கக்கூடாது. வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக ஆதரவு அளித்து அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்காக  போராட்டத்திற்கு துணையாக ஆதரவளித்த தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரலாற்று மிக்க வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்நேரத்தில், இந்த கூட்டத்தொடரை திட்டமிட்டு புறக்கணித்து கொண்ட வேறு சில கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |