Categories
மாநில செய்திகள்

இனி லைசென்ஸ், RC Book எல்லாமே ஈசியா வாங்கலாம்….. தமிழக அரசு மாஸ்டர் பிளான்…!!!!

தமிழக முழுவதும் 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய வாகன பதிவு, பழைய வாகனங்கள் பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிம பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டு ஒன்றுக்கு லட்சக்கணக்கானவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சேவைகளை பெற்று வரும் நிலையில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநில போக்குவரத்து துறையில் சார்பில் ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம் புதிய உரிமம் பெறுவது உள்ளிட்ட சேவைகள் சுலபமானது. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் கணிசமாக குறைந்தது. இவ்வாறு கொடுக்கப்பட்ட இந்த சேவைகள் அலைச்சலையும், நேர விரையத்தையும் பெரிதளவில் குறைத்தது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக இ-சேவை மையங்கள் மூலமாக இந்த சேவைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள நூறு இ சேவை மையங்கள் மூலம் மக்கள் தொடர்பில்லாத சேவைகளை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது விண்ணப்ப படிவங்களை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில் இ சேவை மையங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் பிற சேவைகளும் ஆன்லைன் வாயிலாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அனைத்து சேவைகளுக்கும் ஆஃப்லைன் வழியில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் விரைவில் தமிழக முழுவதும் வரும் என்றும் கூறப்படுகிறது

Categories

Tech |