Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி “ரோஹித் சர்மா” தான் கேப்டன்…. அதிரடி கொடுத்த “பிசிசிஐ”….. அதிருப்தியில் ரசிகர்கள்….!!

டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பை ஆகிய மூன்றுவிதமான அணிகளின் கேப்டன் பதவியை பிசிசிஐ ரோஹித்திடம் ஒப்படைத்துள்ளது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே பிசிசிஐ ஒரு நாள், டி20, இந்திய டெஸ்ட் அணிகளுக்கு தனித் தனி கேப்டன் இருந்தால்தான் அழுத்தமின்றி விளையாட முடியும் என்ற நோக்கில் விராட் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இதனையடுத்து விராட் கோலி டெஸ்ட் அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

இவ்வாறு இருக்க பிசிசிஐ ஒருநாள், டி20, டெஸ்ட் அணி கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிடம் வழங்கியுள்ளது. ஏற்கனவே விராட்கோலி 3 அணிகளுக்கும் கேப்டனாக இருந்ததால் தான் அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு அவரை தலைமைப் பொறுப்பிலிருந்து விலக்கியுள்ளது. ஆனால் பிசிசிஐ தற்போது ரோஹித் சர்மாவிடம் அந்த மூன்று அணிகளுக்கும் கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |