Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கார்டு வேண்டாம்…. பொருள் வாங்க வருகிறது புதிய நடைமுறை…… மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், ரேஷன் கடைகளில் கருவிழியை ஸ்கேன் செய்து பொருள் வாங்கி செல்லும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப் பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அப்படியானால் கடைகளுக்கு ரேஷன் கார்டுகளை எடுத்து செல்ல தேவையில்லை. அங்கே உள்ள ஸ்கேனரில் கண்களை காட்டினாலே பொருட்கள் வழங்கப்படும்.  இந்த முறை தற்போது சோதனை முயற்சியில் இருக்கிறது.

Categories

Tech |