Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் இதை செய்தால்தான் ரேஷன் பொருள்….. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. பொது விநியோகம் கணினிமயமாகப்பட்ட பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விற்பனை அதிகரிக்க இயந்திரத்தின் மூலமாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இருந்தாலும் பயோமெட்ரிக் கைரேகை பதிவு முறையில் தொழில்நுட்ப கோளாறு பிரச்சனைகளால் சில நேரங்களில் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி,தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால் கைரேகை பதிவிற்கு பதிலாக கருவிழி பதிவு முறை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ரேஷன் பொருட்களை வாங்கி செல்லலாம்.இந்தியாவின் பல மாநிலங்களிலும் கருவிழி பதியும் முறை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த நடைமுறை கொண்டு வருவதற்கு தொழில்நுட்ப ரீதியான வேலைகளுக்கான கால அவகாசம் மட்டுமே தேவைப்படுவதால் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் அமல்படுத்தப்படும். அதேசமயம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மற்றொருவர் மூலமாக ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |