Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் இது வேண்டாம்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!!!

ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல்  கருவியில் கைரேகை பொருந்தவில்லை என்றாலும் பொருட்கள் வழங்கப்படும் என  தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் நிதித் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஜான் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் தனிநபர் குடும்ப அட்டை வழங்கப்படுமா,  ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களின் கைரேகைகள் பொருந்தாத காரணத்தினால் பொருட்கள் வழங்கும்  பிரச்சினைகள் நிலவுவதாக கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “யாரையும் சாராத தனியாக சமைத்து வாழ்வை நடத்தும் தனிநபர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை 91,71, 807 தனிநபர் குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் 10,92,604 குடும்ப அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டிருப்பதாகவும் பேசிய  அவர் ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல்  கருவியில் கைரேகை பதிவாக வில்லை என்றாலும் பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பாயிண்ட் ஆஃப் சேல்கருவியில்  ஏற்படும் தொழில்நுட்ப கோளாறை நிவர்த்தி செய்யப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |