ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.
இந்நிலையில் ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப் போல, அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் வகையில் மாற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . மேலும் ரூ.10 மதிப்பிலான 24 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக தமிழகத்தில் 1.167 கடைகள் புதுப்பிக்கப்பட்டு பல்பொருள் அங்காடிகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.