Categories
தேசிய செய்திகள்

இனி ரிசர்வ் செய்யாமலே முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கலாம்….. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில், குறைந்த தூரம் செல்வோர் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறுகிய தூரம் செல்லும் பயணிகளுக்காக ரயிலின் முன்பதிவு பெட்டிகளை ‘டிரிசர்வ்டு’ (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரயிலின் இரு முன்பதிவு பெட்டிகள் அக்.19 முதல் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.

தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக எழும்பூர், ராமேஸ்வரம் செல்லும் ரயிலின் முன்பதிவு பெட்டிகளும், மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே இரு மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளும் அக். 24 முதல் டிரிசர்வ்டு பெட்டிகளாக மாற்றப்படும். இதில் பயணிக்க சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

Categories

Tech |