இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்ய வேண்டும்.அப்படி கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காவிட்டால் அதிகம் செலவு செய்து தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். தற்போது பயணிகள் இதையெல்லாம் செய்ய வேண்டாம்.
இனி பயணம் செய்யும் ரயில்களில் ஒரு பெர்த் காலியாக இருந்தால் அதனை உடனடியாக நீங்கள் அறிந்து கொண்டு அந்த டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம்.ஐ ஆர் சி டி சி இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும்போது அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் இருப்பது தெரியும். அதனை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை அதிக வெயிட் இருந்தால் நீங்கள் முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது வரை ரயிலில் இருக்கைகள் காலியாக உள்ளது என்று தெரிந்து கொள்ள எந்த வசதியும் கிடையாது.
ஆனால் தற்போது ஐ ஆர் சி டி சி இந்த வசதியை பயணிகளுக்காக கொண்டு வந்துள்ளது. அதாவது புஷ் நோட்டிபிகேஷன் வசதி தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக பயனர்கள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறலாம். இந்த புதிய இணையதளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.ரயிலில் இருக்கை காலியாக இருந்தால் அதன் அறிவிப்பு பயனாளிகளின் மொபைல் நம்பருக்கு வந்து சேரும். இதனை தொடர்ந்து பயணிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.