யுபிஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் யுபிஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சேவையின் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே நொடி பொழுதில் மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட முடிகிறது இரவு, பகல் என எந்த நேரங்களிலும் நீங்கள் விரும்பும் நபருக்கு பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சம் ஆகிறது இந்த சேவையின் மூலமாக நீங்கள் பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றுதான் உங்கள் மொபைலில் இருந்து இதனை இயக்கிக் கொள்ள முடிகிறது.
உங்களது மொபைலில் கூகுள், பேடிஎம், பிஹெச்ஐஎம் போன்ற யுபிஐ செயல்களை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டு அதில் வங்கி கணக்கை இணைப்பதன் மூலமாக கட்டண சேவை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த யுபிஐ கட்டண முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல வங்கி கணக்குகளையும் நீங்கள் வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல ஒரே வங்கி கணக்கையும் பல யூபிஐ செயலிகளிலும் இணைத்துக்கொண்டு பயன்படுத்தும் வசதியும் கிடைக்கிறது. மக்களிடம் பிரபலமாக இருந்து வரும் யு பி ஐ எனப்படும் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்பேஸ் இந்திய சர்வீஸ் வங்கி மதிப்பாய்வு செய்து வருவதாகவும் யுபிஐ மூலமாக செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் விதிக்க கூடும் எனவும் யுபிஐ பற்றி சமீப காலமாக சில செய்திகள் வெளியாகி மக்களை குழப்பம் அடைய செய்திருக்கிறது.
இந்த சூழலில் யுபிஐ ட்ரான்ஸாக்சனுக்கு கட்டணம் வசூலிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்யவில்லை என யுபிஐ பற்றி வெளியான வதந்திக்கு தெளிவான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவலை நிதி அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இது பற்றி நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் யுபிஐ சேவையானது பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பை கொண்ட டிஜிட்டல் தளங்களில் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. யுபிஐ ட்ரான்ஸாக்ஷன் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது பற்றிய அரசு எந்தவித பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.