தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் குற்றங்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதற்கும் காவல் துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் நாட்டின் பல நகரங்களிலும் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் குற்றங்களை தடுக்க விதமாகவும், கண்காணிக்கும் விதமாகவும் 100 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட வர்த்தகம், தொழில்கள் மற்றும் காவல்துறை இணைந்து இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.ர் இந்த கேமராக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்துள்ளார்.