தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் சில தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டாக பாதிப்பு எண்ணிக்கை இருப்பதன் காரணமாக ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.