Categories
மாநில செய்திகள்

“இனி யாரும் என்னை ஒதுக்க மாட்டார்கள்”….. சிறுமி டான்யா உருக்கம்….!!!!

அறுவை சிகிச்சை மூலமாக தனது கண்ணம் சரியானது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக சிறுமி டான்யா தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார்.

திருவள்ளுவர் மாவட்டம், ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியில் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் சௌபாக்யா ஆகியோரின் மூத்த மகள் டான்யா. இவருக்கு ஒன்பது வயதாகின்றது. அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் இவர் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்தார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தியை வெளியானது. பின்னர் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாநில அரசு மூலம் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சருக்கு டான்யாவின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் ஐசியூ வார்டில் இருந்த சிறுமி டான்யா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிறுமி டான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு டான்யா நன்றி தெரிவித்தார்.

Categories

Tech |