Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி மொபைல் கூட இது கிடையாது… சாம்சங் நிறுவனம் முடிவு…!!

சாம்சங் நிறுவனம்  இனிவரும் காலங்களில் வெளியாகும் புது மொபைல்களுக்கு சார்ஜர் வழங்கப்படாது என அறிவித்தது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்12 மொபைலுடன் சார்ஜர் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படாது என ஏற்கனவே அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மொபைலின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக தான் இந்த புதிய யோசனை திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது புதிதாக வாங்கும் ஐபோன்12 மொபைல் பாக்ஸில் சார்ஜர் வழங்கப்படாது.  எனவே சார்ஜர் வேண்டுமெனில் புதிதாக பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

சாம்சங் நிறுவனமும் இனி வரும் 2021ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப்படும் அனைத்து மொபைல்களிலும் இத்திட்டத்தை பின்பற்றவுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப சார்ஜரை தனியாக பணம் கொடுத்து கேட்டு வாங்கிக் கொள்ளலாம். 5ஜி மொபைல்கள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்ற நிலையில் இந்த மொபைல்களின் விலை பொதுவாகப் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை வாடிக்கையாளர்களுக்கு சிரமமாக தான் இருக்கும். எனவே இதை தடுக்கும் விதமாகவே இந்த மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றே அறியப்படுகிறது.

Categories

Tech |