நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் இனி முழு ஊரடங்கு கிடையாது என்று கேரள மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். தொற்று அதிகமாக உள்ளதனால் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில் நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய பின், மாநில பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.