பிரான்சில் பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிய வேண்டும் எனவும் ஆனால் பள்ளி மற்றும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என அறிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, பிரான்சில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கூட உணவகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து நேற்று முதல் இந்த அறிவிப்புகளானது கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்தும்,மருத்துவமனைகளில் நிலைமை மேம்பட்டு இருப்பதையும் கருத்தில் கொண்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை உணவகங்கள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதே வேளை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால், கொரோனா பரிசோதனை அண்மையில் செய்து கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா நோயிலிருந்து குணம் அடைந்ததற்கான அண்மை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிய வேண்டும் எனவும் ஆனால் பள்ளி மற்றும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையை குறித்து நிபுணர்கள் கூறியுள்ளதாவது, பிரான்சில் கொரோனா பாதிப்பு ஒரு வாரத்தில் புதிதாக 10,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தியது சரியான நடவடிக்கையாக இல்லை என எச்சரித்துள்ளது.