புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் மருத்துவர்கள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பாக மருத்துவ பணியாற்றிய 25 மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநிலத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய எண்ணம். புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மருத்துவ காப்பீடு திட்டம் சிவப்பு அட்டைகளுக்கு மட்டுமே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள் அட்டைகளுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதனால் விரைவில் மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அஞ்சல் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கிடைக்கும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.