முதல் முறையாக அமெரிக்காவில் பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி பாஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற 16-ஆம் தேதி Key to NYC என்ற பெயரிலான தடுப்பூசி பாஸ் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் உடற்பயிற்சிக் கூடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆதாரத்தை கட்டாயம் காட்ட வேண்டும்.
இந்த நடைமுறையே தடுப்பூசி பாஸ் என்று அழைக்கப்படுவதாக மேயர் கூறியுள்ளார். மேலும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான பாஸையாவது கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.