கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் அதிக சத்தம் வைத்து போனில் பாட்டு கேட்கவோ, வீடியோ பார்க்கவோ கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை பின்பற்றாத வரும் பயணிகளை பேருந்திலிருந்து பாதையில் இறக்கிவிடலாம். இதுகுறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. பயணிகள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Categories
இனி பேருந்துகளில்…. போனில் பாட்டு கேட்கவோ, வீடியோ பார்க்கவோ கூடாது…. அரசு உத்தரவு…..!!!!
