Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அரசுப் பேருந்துகளில் இனி…. அரசு கடும் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் கூட்ட நேரிசல் ஏற்படும்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதன் காரணமாக விபத்து ஏற்படுகிறது.

எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணித்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டால் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |