தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சேவைக் கட்டணங்களை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்துவதாக அரசு தகவல் வெளியிட்டுள்ள்ளது.
தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான சில சேவை கட்டணங்களை பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் அதிகரித்துள்ளது. இதன்படிPOP(points of presence) நிலையங்களில் வழங்கப்படும் புதிய பென்சன் திட்டத்தின் சேவைகளுக்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய கட்டடங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பென்ஷன் திட்ட சேவைகளை ஊக்குவிக்கவும், விநியோகிக்கவும் வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தவும்POP நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு கட்டணம் தற்போது உயர்த்தப்படுவதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி புதிய பதிவு : 200 முதல் 400 ரூபாய் ஆகும்
* புதிய மற்றும் அடுத்தடுத்த பரிவர்த்தனைகள் : பங்களிப்பு தொகையில் 0.50% (குறைந்தபட்சம் 30 ரூபாய்; அதிகபட்சம் 25000 ரூபாய்)
* நிலைத்தன்மை : 1000 முதல் 2999 ரூபாய் வரையிலான பங்களிப்புக்கு ஆண்டுக்கு 50 ரூ
* குறைந்தபட்ச பங்களிப்பு 1000 – 2999 ரூபாய் : ஆண்டுக்கு 50 ரூ
* குறைந்தபட்ச பங்களிப்பு 3000 – 6000 ரூபாய் : ஆண்டுக்கு 75 ரூ
* குறைந்தபட்ச பங்களிப்பு 6000 ரூபாய்க்கு மேல் : ஆண்டுக்கு 100 ரூ