Categories
தேசிய செய்திகள்

இனி பெட்ரோலில் இதையும் கலக்க திட்டம்…. மத்திய அரசு போட்ட செம பிளான்….!!!!

பெட்ரோல், டீசல் போன்ற புதை வடிவ எரிபொருட்களின் விலை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல், அதன் மூலமாகச் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்வதன் மூலமாக ஒருபக்கம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும் என்பதுடன், அதற்கான செலவினமும் சற்று குறைவாக இருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை படிப்படியாக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பெட்ரோலில் 10% எத்தனாலை கலக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா இந்த ஆண்டு அடைந்தது. இதை தொடர்ந்து 20% எத்தனால் கலக்கும் திட்டத்தை 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையான இலக்கை எட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |