Categories
மாநில செய்திகள்

இனி புதிய பாடத்திட்டம் அறிமுகம்…. மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு…..!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதால் விளக்கம் அளித்துள்ளது. மாணவர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற 25 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களை உருவாக்குவதில் 80 விழுக்காடு தொழில்துறையினர் பங்களிப்பு இருக்கும். 20 விழுக்காடு மட்டுமே பேராசிரியர்களின் பங்கு இருக்கும். நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கும் அடுத்தடுத்து நான்காம் ஆண்டு மாணவர்கள் வரை பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |