தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு கோடி 3 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு குறைகளையும் தீர்க்க வேண்டியது அரசின் கடமை. ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. அதை உள்வாங்கி செயல்பட வேண்டும். நேரடியாக களத்திற்கு சென்று பிரச்சனைகளை ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கலில் ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. அதனால் மாணவர்கள் தவறான முடிவெடுக்கின்றனர்.
அவர்களுடைய திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இருக்கும் குறைகளையும், ஆசிரியர்கள் தங்களின் தனிப்பட்ட புகார்களையும் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். ஆசிரியர்கள் தங்கள் குறைகளை கூறுவதற்காக தனது அலுவலகத்திலும், வீட்டிலும் புகார் பெட்டி ஒன்று வைக்கவுள்ளதாக அவர் கூறினார். இத்திட்டத்திற்கு ‘ஆசிரியர் மனசு’ என பெயர் சூட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.