Categories
தேசிய செய்திகள்

இனி பால் வாங்குறது கஷ்டம் தான் போல….. அதிரடியாக உயர்ந்த விலை…..

அமுல் நிறுவனம் தங்களது பாலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே சமையல் சிலிண்டர், காய்கறி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவுதி அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளம் செலவுக்கு சரியாக உள்ளதாக புலம்புகின்றனர். நடுத்தர மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பொது மக்களின் தினசரி அத்தியாவசிய உணவுப் பொருட்களாக உள்ள பால் விலை உயர்வு மக்களை நேரடியாக பாதிக்கின்றது.

அமுல் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் நாளை முதல் பால் விலை உயரும் என்றும், லிட்டருக்கு ₹2 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அமுல் பிராண்டில் பால் விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. பால் விலை உயர்வால் பால் பிராண்டு பெயரில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். லிட்டருக்கு ரூபாய் இரண்டு உயர்வு என்பது சில்லறை விற்பனையில் லிட்டருக்கு நான்கு சதவீதம் உயரும் எனவும், இது பணவீக்க சராசரியை விட குறைவு தான் எனவும் அமல் நிறுவனம் கூறியுள்ளது. இதில் பால் விலை உயர்வானது பொது மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் பால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |