கூகுள் நிறுவனம் வரும் 2021 வருடத்திலிருந்து தனது செயலியின் கட்டணமில்லா பண பரிமாற்ற வசதியை நிறுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் மூலமான பண பரிமாற்றத்திற்கு UPI முறையில் கூகுள் பே ஆப்பை நீங்கள் பயன்படுத்தினால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானதாக இருக்கும். கூகுள் பே மூலம் பணத்தை மாற்றுவது இனி இலவச சேவையாக இருக்காது. வங்கி பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும்(transfer fee) என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான தயாரிப்பு வேலைகளை நிறுவனம் தற்போது ஆரம்பித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் மொபைல் செயலியான Google Pay மற்றும் paly.google.com இணைய செயலி மூலம் பண பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் இந்த இணையதள சேவைகள் ரத்து செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “வரும் வருடம் 2021 முதல் play.google.com மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முடியாது. எனவே பணம் அனுப்பவும், பெறவும் கூகுள் ஆப்பை பயன்படுத்தலாம்”என்று அறிவித்துள்ளது.
உங்களுடைய வங்கி பணத்தை உடனடியாக மாற்றுவதற்கான கட்டணத்தையும் கூகுள் பே அறிமுகபடுத்தியுள்ளது. உங்களுடைய வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் ஆகும். ஆனால் டெபிட் கார்டு மூலமாக செய்யும் பண பரிவர்த்தனை உடனடியாக நடக்கும். எனவே டெபிட் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்யும் போது 1.5% அல்லது 0.31 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.