இனி வரக்கூடிய மாதங்களில் நோய் தொற்று குறையும் என அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது. ஆண்டுதோறும் இந்த பருவ கால நோய் பரவுவது வழக்கம். ஆனால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தமிழகத்தில் பருவ கால நோய் தொற்று தீவிரம் அடைந்துள்ளது. மேலும் அடுத்தடுத்து வரக்கூடிய மாதங்களில் இந்த நோய்கள் குறையும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் பாதிப்புகள் அதிகமாக ஏற்படவில்லை. ஆனால் தற்போது நிலை மாறியுள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைத்தும் படுக்கை வசதிகளை அதிகரித்து சிகிச்சை வழங்குகிறோம். ஆனால் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களில் டெங்கு காய்ச்சலால் 121 பேரும், ஜூலை மாதத்தில் 47 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 53 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.