Categories
தேசிய செய்திகள்

இனி நொடியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்…. IRCTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு IRCTC உங்களுக்காக ஒரு சிறப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக மிக எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். IRCTC வாடிக்கையாளர்களுக்காக இ-வாலட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் IRCTC கணக்கில் பணத்தை டெபாசிட் செய்த டிக்கெட்டுகளை மிக எளிதாக முன்பதிவு செய்ய முடியும். மேலும் இது ஒரு வகையான டிஜிட்டல் வாலட். இது மிக பாதுகாப்பாகவும் மிக விரைவாக பரிவர்த்தனைகளை செய்ய உதவுகின்றது. இதனை தவிர முன்பதிவு செய்யும்போது பேமென்ட் கேட்வே தொடர்பான தொல்லைகள் எதுவும் இருக்காது.

நொடியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இதில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதில் பயனர் சரிபார்ப்புக்கு பான் அல்லது ஆதார் எண்ணை உள்ளீடுவது அவசியம். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பரிவர்த்தனை கடவுச்சொல் உள்ளிட வேண்டும். அதன்பிறகுதான் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலும். இதன் மூலமாக நீங்கள் எவ்வளவு தொகைக்கு முன்பதிவு செய்து உள்ளீர்கள் என்ற தகவல்களை எளிதாக பார்க்கலாம்.

IRCTC eWallet-ல் பணத்தை டெபாசிட் செய்யும் முறை:

முதலில் பயனர் IRCTC இ-வாலட்டில் உள்நுழைய வேண்டும்.

பிறகு உங்களுக்கு தேவையான தொகையை உள்ளிடவும்.

இப்போது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணப்பையில் பணத்தைச் சேர்க்கவும்.

இதற்குப் பிறகு பணம் IRCTC இ-வாலட்டில் பணம் டெபாசிட் செய்யப்படும்.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்முறை

இ-வாலட் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, முதலில் IRCTC ஐடியை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். பிறகு, ‘பிளான் மை டிராவல்’ என்ற பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.  இ-வாலட் பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும். உங்கள் பான் அல்லது ஆதார் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர், ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.50 வரை டெபாசிட் செய்யவும். இ-வாலட்டில் குறைந்தபட்சம் ரூ.100 டெபாசிட் செய்யுங்கள். முன்பதிவு விவரங்களை உள்ளிட்டு 2  நிமிடங்களில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

Categories

Tech |