Categories
மாநில செய்திகள்

“இனி நேரில் செல்ல வேண்டாம்”… அடுத்த மாதம் முதல்… மின் கணக்கீட்டில் மாற்றம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் மீட்டரில் மின் கணக்கீடு செய்ய தமிழக  அரசு அறிவித்துள்ளது.

வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க ‘ஸ்டேடிக்’ மீட்டரை தமிழக மின்வாரியம் பொருத்தியுள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று மின் பயன்பாட்டை கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சிலர் நேரில் செல்லாமல் இஷ்டத்திற்கு கணக்கெடுப்பது, குறித்த நேரத்தில் காலதாமதமாக கணக்கெடுக்கப்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக  வருவாய்க்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இதனை அடுத்து ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து மாநில மின் வாரியம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த மீட்டரில் மின் பயன்பாடு ,கணக்கெடுக்கும் தேதி, மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்பட்டு தொலை தொடர்பு வசதியுடன் அலுவலக சர்வருடன் இணைக்கப்படும்.

இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் கீழ் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் முறை நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக சென்னை தி.நகரில் அடுத்த மாதம் இதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.  படிப்படியாக மார்ச் மாதம் முதல் அனைத்து ஸ்மார்ட் மீட்டர்களிலும் கணக்கெடுக்கப்படும்.  இதனால் இனி மாதந்தோறும் கணக்கெடுக்கும் முறை அமல்படுத்தப்படலாம்  என கூறப்படுகிறது.

Categories

Tech |