Categories
மாநில செய்திகள்

இனி நெல் விற்பனை இப்படி தான் பண்ணனும்?…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஆன்லைன் மூலம் மட்டுமே விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பதிவு செய்ய விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வேண்டும்.

பின்பு விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் அனுப்பப்படும்.
விவசாயிகள் தங்களது செல்போன் எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்துகொள்ளலாம். என அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |