Categories
தேசிய செய்திகள்

இனி தேர்தலில் “குற்றம் செய்தால் போட்டியிட முடியாது”…. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்….!!!!

குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாரத ஜனதா கட்சியை சேர்ந்தவர் வக்கீல் அஸ்வினி  உபாத்யாய். இவர்  சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல்  செய்திருந்தார். அதில் கடுமையான குற்றங்கள் செய்து அதற்காக கோர்ட்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். மேலும் இதற்கு மத்திய அரசும், தேர்தல் கமிஷனுக்கும்  உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த மனுவில் எதிர்மனுதாரர் யார் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அஸ்வின் உபாத்யாய  தேர்தல் கமிஷன், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், சட்ட ஆணையம் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளதாக பதில் அளித்துள்ளார். இதனை கேட்ட நீதிபதி கடுமையான குற்றங்களுக்கு எதிராக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தாக்கல் செய்ய பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், சட்ட ஆணையம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |