Categories
லைப் ஸ்டைல்

இனி தினமும் காலையில்… எலுமிச்சை இஞ்சி டீ குடிங்க… படிச்சா தினமும் தவறாம குடிப்பீங்க…!!!

தினமும் காலையில் எலுமிச்சை இஞ்சி டீ குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி நாம் தினமும் காலையில் டீ குடிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு குடிக்கும் டீ உடலுக்கு சத்தானதாக இருக்கவேண்டும். எலுமிச்சை டீ தினமும் காலை குடிப்பது மிகவும் நல்லது. எலுமிச்சை தோலை நீரில் துண்டாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல குடித்துவர உடல் நலத்தை மேம்படுத்தும். இந்த எலுமிச்சை தோல் டீ உடலின் அமில காரத் தன்மையை குறிக்கும் ph அளவு சீராகி, வியாதி எதிர்ப்பு ஆற்றல் மேம்படும். இதனுடன் சிறிது இஞ்சி தோல் நீக்கி சேர்த்தால் ஆற்றல் கூடும்.

Categories

Tech |