மாநகர சபை கூட்டங்களை போல கிராம சபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சிக்குள்ட்பட்ட பம்பலில் இன்று 6-வது வார்டு மாநகர சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் வரும் 9-ஆம் தேதி முதல் நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை போல மக்கள் பங்கேற்கும் கிராமசபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.