குற்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டோம் என்று 107 குற்றவாளிகள் காவல் துறையினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவின் பெயரில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், மீனாட்சி ஆகியோர் தலைமையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அவர்கள் நன்னடத்தையுடன் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
அதன்பேரில் திருந்தி வாழ்ந்து வரும் 107 குற்றவாளிகளை திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு வரவழைத்து அறிவுரை கூறப்பட்டது .அதைத் தொடர்ந்து இனி வரும் காலங்களில் எந்த வித குற்ற செயல்களிலும் செயல்பட மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் .இருப்பினும் இவர்களுடைய நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். டிஎஸ்பி துரைபாண்டியன், சாரதி ,கல்பனாதத்,குனசேகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.