Categories
தேசிய செய்திகள்

இனி தபால் அலுவலகங்களிலேயே வீட்டுக்கடன்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தபால் அலுவலகங்கள் அஞ்சல் சேவை மட்டுமல்லாமல் பல நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. சேமிப்பு, டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் என பல்வேறு நிதி சேவைகளை தபால் அலுவலகங்கள் மூலமாக மக்கள் பெற முடியும். இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஈஸியாக வீட்டு கடன் வழங்க எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கூட்டணி அமைத்துள்ளது. வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை தபால் அலுவலகங்கள் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தபால் அலுவலகங்கள் மூலமாக வீட்டு கடன் பெறலாம். இதற்காக எச்டிஎப்சி நிறுவனமும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 4.7 கோடி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகள் வழங்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |