அமேசான் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் மற்றும் டெலிவரி போன்ற பயன்பாட்டிற்கு எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்கு அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
உலகில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த பேட்டரி ஸ்வாப் டெக்னாலஜி நிறுவனமான சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து வசதிக்காக வாகனங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் மற்றும் வாகனங்களுக்கு பேட்டரி ஸ்வாப் செய்யும் டெக்னாலஜியை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் வழங்குகின்றது. 2020ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் இந்தியாவிற்கு வருகை தந்த போது எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வாங்கிய பொருளை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
அதன் ஒரு கட்டமாக வரும் 2025ம் ஆண்டுக்குள் பத்து எலக்ட்ரிக் வாகனங்களை தங்கள் டெலிவரி வாகனங்களில் சேர்க்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக சன் மொபிலிட்டி நிறுவனமும் அமேசான் நிறுவனமும் அதன் டெலிவரி பார்ட்னர்களுக்கும் தங்கள் முன்னணி டெக்னாலஜி மற்றும் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் பேட்டரி மற்றும் சன் மொபிலிட்டி நிறுவனத்தின் பேட்டரி ஸ்வாப் பாயிண்ட் சென்று பேட்டரி ஸ்வாப் செய்துகொள்ளும் வசதியையும் வழங்கவுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் பத்து லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை ஸ்வாப் வசதியுடன் தயாரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது சன் மொபிலிட்டி நிறுவனம். இது போன்ற எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் டெலிவரி செய்யும் திட்டத்தை டெல்லி, பெங்களூரு, சண்டிகர் போன்ற நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.