Categories
தேசிய செய்திகள்

“இனி டிராஃபிக்கிற்கு குட் பாய்” விரைவில் வருகிறது ஹெலிகாப்டர் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் பெங்களூருவும் ஒன்றாக இருக்கிறது. இங்கு  சமீபத்தில் கனமழை பெய்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக தற்போது ஹெலிகாப்டர் டாக்சி சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக பிளை பிளேடு என்ற நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை வாங்குகிறது.

இந்த ஹெலிகாப்டர் சேவை‌ பெங்களூர்‌ விமான நிலையத்தில் இருந்து ஹெச்ஏஎல் பகுதிக்கு தொடங்கப்பட இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 முறை இயங்கும். இந்த இடத்திற்கு சாலை வழி போக்குவரத்தை பயன்படுத்தினால் 2 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதே ஹெலிகாப்டரில் சென்றால் 15 நிமிடங்களில் சென்று விடலாம். இந்த சேவை வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் நிலையில் ஒருமுறை பயணிப்பதற்கான கட்டணம் 3250 ரூபாய் ஆகும். மேலும் ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை பெங்களூர் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |