Categories
தேசிய செய்திகள்

இனி டிக்கெட் பரிசோதனை இப்படி தான் நடக்கும்…. ரயில் பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் பரிசோதனையை எளிமையாக்கி நவீனப்படுத்தும் விதமாக கையடக்க கணினி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.வழக்கமாக முன்பதிவு பெட்டிகளில் பயணச்சீட்டு பரிசோதவர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள் .

ஆனால் தற்போது ரயில்களில் இந்த பயணிகள் பட்டியல் கணினிமயமாக்கப்பட்ட உள்ளது. இதற்காக மொத்தம் 857 கையடக்க கணினிகளை தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது . அவற்றில் சென்னைக்கு 246, திருச்சிக்கு 101, மதுரைக்கு 98, திருவனந்தபுரத்திற்கு 148, பால காட்டிற்கு 140 மற்றும் சேலத்திற்கு 124 கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

Categories

Tech |