இந்தியாவில் பெரும்பாலானோர் தற்போது ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும் பாதுகாப்பும் சவுகரியமும் இருப்பதால் நிறைய பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம். ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பாக பயணிகள் IRCTCதொடர்பான விதிமுறைகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ரயிலில் அபராதம்,திருட்டு மற்றும் சக பயணிகளின் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது .
எனவே ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ரயில்வே விதிமுறைகள் பற்றி தெரிந்து கொண்டு பயணம் செய்வது நல்லது. சில நேரங்களில் திடீரென்று பயணம் செய்ய நேரிடும் போது டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் உடனடியாக ரயிலில் போக வேண்டிய கட்டாயம் இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய முடியும். ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யாமல் உடனடியாக பயணம் செய்ய விரும்பினால் பிளாட்பார்ம் டிக்கெட் மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலில் நீங்கள் ஏறி விடலாம்.
அதன் பின்னர் நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். ரயில்வேயில் இப்படி ஒரு விதிமுறை உள்ளது. ஆனால் இதனை செய்ய நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்த உடனே செக்கிங் அதிகாரியிடம் பேசிவிட வேண்டும். பிறகு நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரை உங்களுக்கு ஒரு தனி டிக்கெட் வழங்கப்படும். அதனைப் போலவே சில சமயங்களில் ரயிலில் சீட் காலியாக இருக்காது. அப்போது செக்கிங் அதிகாரி சீட் கொடுக்க மறுக்கலாம்.
அச்சமயத்தில் உங்களுடைய பயணத்தை நிறுத்த முடியாது.தையலில் நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்யவில்லை என்றால் 250 ரூபாய் அபராதத்துடன் சேர்த்து பயணத்தின் மொத்த கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற வேண்டும். ரயிலில் பயணம் செய்வோருக்கு இந்திய ரயில்வேயில் இது போன்ற நிறைய விதிமுறைகள் உள்ளது. அவை அனைத்தும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்ட இந்திய ரயில்வே இது போன்ற பல்வேறு விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறது. எனவே இதனைப் பயன்படுத்தி நீங்கள் ரயிலில் பயணிக்கலாம்.