Categories
மாநில செய்திகள்

“இனி ஜாலி தான்” நிலைமை சீராகும் வரை விடுமுறை – செம அறிவிப்பு…!!

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகும் வரை ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் வரும் டிசம்பர் 2 ம் தேதி முதல் முதுநிலை மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிவர் காரணமாக பெய்துள்ள கனமழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகும் வரை ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |