Categories
மாநில செய்திகள்

இனி சென்னை செல்லாது…. மதுரை செல்லும் ரயிலில் புதிய மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும்.  தற்போது சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை தாம்பரம் யார்டில் இன்று காலை 9:55 முதல் பிற்பகல் 1:55 வரை முக்கிய பணிகள் நடைபெற உள்ளது. இதனால் செங்கல்பட்டில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும்.

அதனை போல காரைக்குடி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 5.05 மணிக்கு புறப்பட்டது. இது சென்னை எழும்பூர் வரை செல்லாமல் செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்திக் கொள்ளப்படும். அதனைதொடர்ந்து 22403 என்ற எண் கொண்ட புதுச்சேரி-நியூ டெல்லி எக்ஸ்பிரஸ் புதுச்சேரி ஜங்சனிலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்படுகிறது. இது சென்னை எழும்பூர் வழியாக செல்லாமல் செங்கல்பட்டு, அரைக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக திரும்பி விடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |