சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை 1550 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக மாநகராட்சி தற்போது உயர்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெருக்களில் சுற்றி தெரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 1550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை 3000 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் மாடுகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இந்த அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.