NCPI நிறுவனம் கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ தளத்தில் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ரூபே கார்ட்டை வழங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இனி கிரெடிட் கார்டை யுபிஐயுடன் இணைத்து பயன்படுத்த முடியும். இதை தொடர்ந்து மற்ற வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை யுபிஐ சேவையில் இணைத்து பயன்படுத்தும் வகையில் சேவை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வசதியின் பலனை எட்டு வங்கி வாடிக்கையாளர்கள் பெறலாம். அதில் கனரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை அடங்கும். அதுமட்டுமின்றி எல்லை தாண்டிய பரிவர்த்தனை வசதியும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது