Categories
ஆட்டோ மொபைல்

இனி கவலையே வேண்டாம்….. ஆப்பிள் தயாரித்து வரும் புதிய சாதனம்….!!!!

ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களின் சார்ஜிங் பற்றி கவலைகளை போக்குவதற்காக புதிய சார்ஜர் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சார்ஜரானது 35W  சக்தியை கொண்டுள்ளதாகவும், கேலியம் நைட்ரைட் என்ற செமி கண்டெக்டரை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மற்ற பவர் சார்ஜர்களை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனவும் இதில் ஒரு போர்ட்டுக்கு பதில் இரண்டு போர்ட் போடப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் ஆப்பிள் பயனாளர்கள் ஒரு சார்ஜ் மூலம் இரண்டு சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக ஐபோன், ஆப்பிள் வாட்ச் என எதை வேண்டுமானாலும் இதில் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இந்த செய்தி ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |