Categories
மாநில செய்திகள்

இனி கட்டாயம் இல்லை… தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…!!!

டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு அல்லது நிரந்தர பதிவு வைத்திருக்க அனுமதி இல்லை. நிரந்தரப் பதிவில் இணைந்துள்ள ஆதார் எண்ணை ஒரு முறை மட்டுமே மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது. ஏற்கனவே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்வாளர்கள் கோரிக்கையை ஏற்று ஆதார் எண்ணை இணைக்கும் முடிவை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எண் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பே டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |