அதிமுகவின் அடையாள அட்டையில் இருந்து ஓபிஎஸ் படம் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொது செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் கட்சிப் பணிகளிலும் தீவிரமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் அதிமுக உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் போன்றவருடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஓ பன்னீர்செல்வத்தின் படத்தை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி படம் மட்டும் இடம்பெறும் விதமாக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் அதிமுகவில் 90 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றார்கள். மேலும் மாவட்ட வாரியாக உறுப்பினர் அடையாள அட்டை அச்சடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த அட்டைகளை மாவட்ட செயலாளர்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.