Categories
மாநில செய்திகள்

இனி ஒரே டிக்கெட்டில் இவை அனைத்திலும்…. சென்னை முழுக்க சுற்றி வரலாம்…. தமிழக அரசு முடிவு….!!!

சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் நேற்று சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில்  நடைப்பெற்றது. அதில் ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் மக்கள் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இனி சென்னையில் ஒரே டிக்கெட்டில் மெட்ரோ, உள்ளூர் ரயில் மற்றும் பேருந்தில் பயணம் செய்யலாம் என்னும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன் படி எங்கு செல்ல வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை கட்டிவிட்டால் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும் என முடிவாகியுள்ளது.

Categories

Tech |